காத்திருப்பின் தனிமையில்

வாங்கிய புத்தகங்களின்
முதல் வாசிப்பு
முடிந்து விட்டது

ஆஸ்கர் வீரனின்
இசைக் கோர்வைகளில்
ஓயாது பயணம்
செய்தாகிவிட்டது

பாட்டியிடம் கேட்க
இனி
கதைகளில்லை

மௌனத்தின் ஆழத்தில்
கரைந்து கொண்டிருக்கும் நான்
முடிவில் கவிதை
எழுதக் குவிந்தேன்

என் குறைந்தபட்ச ஆளுமையுடன்
அதிகபட்ச நெகிழ்ச்சியுடன்
அடித்தல் திருத்தலற்று
எழுதி முடித்தேன்
நீ மட்டும் நீந்துகின்ற
அந்தக் கவிதையை

" தொடர்கிறது
உனக்கான
எனது
காத்திருப்பு.. "

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS